செர்ரீடோஸ் தமிழ் சங்கம் (CTS), தென் கலிபோர்னியாவில் செர்ரீடோஸ் நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ் குழுமம்.
இக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழ் பள்ளி, புலம் பெயர்ந்து இங்கு வாழும் மாணவர்களுக்கு, தமிழ் கல்வி அளிக்கிறது.
மேலும், விழாக்கள், கலை நிகழ்வுகள் வழியாக, தமிழ் கலாச்சார, பண்பாட்டு பயிற்சியையும் அளிக்கிறது.
பெற்றோர்களாலும், தன்னார்வலர்களாலும் கட்டமைக்கப்பட்ட இப்பள்ளியின் ஆசிரியக் குழு, வாரம் ஞாயிறு, தமிழ் கல்வி வகுப்புகள் நடத்துகிறது. அமெரிக்கன் தமிழ் அகாடமி (ATA) என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு, அதன் செம்மையான பாடத்திட்டத்தைத் தழுவி, பாடங்களும், மும்மாத இடைவெளியில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, பழந் தமிழ் இலக்கிய அறிமுகம், நாட்டுப் புற பாடல்கள், சொலவடைகள், பழமொழிகள் என பல பரிமாணங்களில் மாணவர்களுக்கு ஒரு முழுமையான தமிழ் அனுபவம் வாய்க்கப் பெறுகிறது.
திரை கடலோடி திரவியம் தேடுவதோடு நின்று விடாமல், திரை கடலோடியும் தமிழ் கற்போம், தமிழ் அறம் வளர்ப்போம் என்று பெருமையுடன் சொல்கிறது செர்ரீடோஸ் தமிழ் சங்கம். non profit organizations
Address: 18800 Norwalk Blvd, Artesia, CA 90701
Sunday : 5.00 PM - 7.00 PM